வங்கதேச டி20 தொடர்; சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!

Updated: Fri, Oct 04 2024 10:11 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.  

இதனையடுத்து இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எதிவரும் அக்டோபர் 06ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரானது குவாலியர், டெல்லி மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சமீபத்தில் அறிவித்துள்ளது.

அதன்படி, வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தும் நிலையில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட நட்சத்திர் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. மேற்கொண்டு மயங்க் யாதவ், ஹர்ஷித் ராஜான் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதன்படி, இந்த டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா 95 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் முன்னாள் வீரர்கள் எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டி அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை அடைவார்.

இதுவரை இந்திய அணிக்காக 102 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா 79 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்களுடன் 1,523 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் மகேந்திர சிங் தோனி 98 போட்டிகளில் விளையாடி 1617 ரனக்லையும், சுரேஷ் ரெய்னா 78 போட்டிகளில் விளையாடி 1605 ரன்களையும் சேர்த்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா 4231 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 4188 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

இதுதவிர இந்த டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு 4 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெறுவார். ஹர்திக் இதுவரை 102 போட்டிகளில் 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ரா 70 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை