பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியிலும் அதிரடியாக தொடங்கிய ஃபிரேசர் மெக்குர்க் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட்டும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 18 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 6 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியும் 101 ரன்னிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 14 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 13 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த ஆடம் ஸாம்பா தனது பங்கிற்கு 18 ரன்களைச் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியானது 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாரிஸ் ராவூஃப் 5 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News