INDW vs WIW, 2nd ODI: ஹர்லீன் தியோல் அசத்தல் சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

Updated: Tue, Dec 24 2024 23:02 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரதிகா ராவலுடன் இணைந்த ஹர்லீன் தியோலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த நிலையில், 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்லீன் தியோல் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, சதமடித்து விளையாடி வந்த ஹர்லீன் தியோலும் 115 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸும் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களை எடுத்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் டியாண்டிரா டோட்டின், அஃபி ஃபிளெட்சர், ஸைதா ஜேம்ஸ் மற்றும் கியானா ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கி நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய கியானா ஜோசப் 15 ரன்னிலும், கிராஃப்டன் 13 ரன்னிலும், ரஷாதா வில்லியம்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், டியாண்டிரா டோட்டின் 10 ரன்னிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷமைன் காம்பேல் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

பின் ஷமைன் காம்பேல் 38 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆலியா அலீனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹீலி மேத்யூஸ் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 13 பவுண்டரிகளுடன் 106 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹீலி மேத்யூஸும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களில் ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சார்மா, டிடாஸ் சாது மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கண்க்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹர்லீன் தியோல் ஆட்டநாயகி விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை