WPL 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி மூன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Mar 06 2023 12:07 IST
Image Source: Google

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. அதிலும் இதில் 3 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி மற்றும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவும் 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியிலேயே 207 ரன்களைக் குவித்ததுடன், 143 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரிகளுடன், 65 ரன்களையும், ஹீலி மேத்யுஸ் 47 ரன்களையும், அமிலியா கெர் 45 ரன்களையும் சேர்த்து பேட்டிங்கில் தங்களது அதிரடியை காட்டியது. 

அதேசமயம் பந்துவீச்சில் சைகா இஷாக், அமிலிய கெர், இஸி வாங், பூஜா வஸ்திரேகர் ஆகியோரும் அபாரமாக செயல்பட்டு எதிரணியை வெறூம் 64 ரன்களுக்கு சுருட்டியது. இப்படி பேட்டிங், பந்துவீச்சு என இரு பிரிவிலும் அசத்தியுள்ளதால் இப்போட்டியிலும் அதே ஃபார்மை மும்பை அணி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபுறம் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதில் பேட்டிங்கில் மந்தனா, ஹீதர் நைட், எல்லிஸ் பெர்ரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட பட்சத்திலும், ரிச்சா கோஷ், சோஃபி டிவைன், திசா கசத் ஆகியோரும் சிறப்பாக செயல்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அதேசமயம் பந்துவீச்சில் அந்த அணி படுமோசமான சொதப்பியது. அதிலும் டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளை 167 ரன்கள் வரை பிரிக்க முடியாமல் தடுமாறினர். ரேனுகா சிங், மேகன் ஸ்கவுட் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் இருந்த பட்சத்திலும், ஹீதர் நைட் மட்டுமே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் இப்போட்டியில் ஆர்சிபி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச லெவன்

மும்பை இந்தியஸ்- ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் (கே), நாட் ஸ்கைவர்-பிரண்ட், அமிலியா கெர், அமன்ஜோத் கவுர், பூஜா வாஸ்திரேகர், ஹுமிரா காஸி, இஸி வோங், ஜின்டிமனி கலிதா, சைக்கா இஸ்ஹக்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், ஹீதர் நைட், திஷா கசாட், எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ப்ரீத்தி போஸ், மேகன் ஷுட், ரேனுகா தாகூர் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்-ரிச்சா கோஷ்
  • பேட்டர்கள் - ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஹீதர் நைட்
  • ஆல்-ரவுண்டர்கள்-எல்லிஸ் பெர்ரி, நாட் ஸ்கைவர், அமிலியா கெர், ஹேலி மேத்யூஸ்
  • பந்து வீச்சாளர்கள் - மேகன் ஷுட், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர்/இஸி வோங்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை