அபாரமான கேட்ச்சை பிடித்த ஹாரி புரூக்; ஆச்சரியத்தில் உறைந்த பென் ஸ்டோக்ஸ் - காணொளி!

Updated: Sat, May 24 2025 23:11 IST
Image Source: Google

இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்களைக் குவித்து டிகளர் செய்வதாக அறிவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக அதிகபட்சமாக ஒல்லி போப் 172 ரன்களையும், பென் டக்கெட் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 124 ரன்களையும் குவித்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் 139 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதையடுத்து 300 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 255 ரன்களில் ஆல் அவுட்டானது.  இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோயப் பஷீர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் 48ஆவது ஓவரை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசினார். அப்போது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட வெஸ்லி மதவெரே பவுன்சராக வந்த அந்த பந்தை தடுத்து விளையாட முயற்சித்த நிலையில், அந்த பந்து பேட்டில் எட்ஜாகி சென்றது. 

Also Read: LIVE Cricket Score

அப்போது தேர்ட் ஸ்லீப் திசையில் நின்று கொண்டிருந்த ஹாரி ப்ரூக் தலைக்கு மேல் சென்ற பந்தை லாவகமாக தாவி ஒற்றை கையால் கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சாரியத்தில் ஆழ்த்தினார். அதிலும் குறிப்பாக ஹாரி புரூக்கின் இந்த கேட்சை கண்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸும் ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்தார். இந்நிலையில் ஹாரி புரூக் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை