விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!

Updated: Sun, Sep 29 2024 21:04 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் தற்போது வரை நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

இதையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது பென் டக்கெட், ஹாரி புரூக் மற்றும் பில் சால்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதில் அதிகபட்சமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்ததுடன் 107 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹாரி ப்ரூக் 72 ரன்களிலும், அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 45 ரன்களையும் சேர்க்க, ஆதில் ரஷித் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். 

ஆஸ்திரேலியா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். 

 

அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை முறியடித்து ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 310 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹாரி ப்ரூக் 312 ரன்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள்

  • 312 - ஹாரி புரூக் (இங்கிலாந்து, 2024)
  • 310 - விராட் கோலி (இந்தியா, 2019)
  • 285 - எம்எஸ் தோனி (இந்தியா, 2009)
  • 278 - ஈயோன் மோர்கன் (இங்கிலாந்து, 2015)
  • 276 - பாபர் ஆசம் (பாகிஸ்தான், 2022)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை