2021ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவித்தார் ஹர்ஷா போக்ளே!

Updated: Sun, Dec 26 2021 21:12 IST
Harsha Bhogle picks his Test XI of 2021, includes Ashwin, Pant and Rohit Sharma (Image Source: Google)

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. இவர்  2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 

இவரது பிளேயிங் லெவனின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவையும், அவருடன் இலங்கையின் திமுத் கருணரத்னேவையும் தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, 3ஆம் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர இளம் வீரரான மார்னஸ் லபுசாக்னேவை தேர்வு செய்துள்ளார். 

மேலும் 4ஆம் வரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டையும், 5ஆம் வரிசையில் பாகிஸ்தானின் ஃபவாத் ஆலமையும், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையும் தேர்வு செய்துள்ளார். 

அணியின் ஆல்ரவுண்டராக ஜேசன் ஹோல்டரையும், ஸ்பின்னராக அஷ்வினையும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷாஹீன் அஃப்ரிடி, அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் கைல் ஜேமிசன் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் ஆகிய இருவரையும் ஹர்ஷா போக்ளே தனது லெவனில் தேர்வு செய்யவில்லை.

ஹர்ஷா போக்ளேவின் 2021ன் சிறந்த டெஸ்ட் லெவன்: ரோஹித் சர்மா, திமுத் கருணரத்னே, மார்னஸ் லபுஷேன், ஜோ ரூட், ஃபவாத் ஆலம், ரிஷப் பந்த், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாஹீன் அஃப்ரிடி, அன்ரிச் நோர்ட்ஜே, கைல் ஜேமிசன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை