கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வெங்கடேஷ் ஐயர் இம்முறை அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

Advertisement

கடந்த முறை, கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் அடி பாதளத்தில் இருந்த இறுதிப் போட்டி வரை சென்றது. அதற்கு காரணம் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டமும், பவுலிங்கும் தான். வெங்கடேஷ் ஐயரின் இந்த அபார ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் அவரை தேடி வந்தது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவரை வெங்கடேஷ் ஐயர் ஓரங்கட்டினார்.

Advertisement

ஆனால் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெங்கடேஷ் ஐயர் தனது பேட்டிங்கில் முன்பு போல் விளையாடவில்லை. நடப்பு சீசனில் 9 போட்டியில் விளையாடி 132 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். அந்த அரைசதமும் வேகமாக அடித்த ரன்கள் கிடையாது. இதனால் கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனிலே அவரது இடம் கேள்விக்குறியாகி விட்டது.

இதனால், வெங்கடேஷ் ஐயர் வெறும் ஒரு சீசனில் மட்டும் பூக்கும் குறிஞ்சி மலர் என்று சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் வெங்டேஷ்க்கு எதிர்பாராத திடீர் புகழ் வந்ததும், அவருடைய கவனம் கிரிக்கெட்டிலிருந்து சென்றுவிட்டதும் என்று விமர்சனம் செய்தனர். அதற்கு தகுந்தார் போல், கடந்த மாதம் தெலுங்கு நடிகையிடம் ரொமன்ஸ் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடினாலும், அவரது காலை குறி பார்த்தும் பந்தவீசினால் அவர் அடிக்க திணறுகிறார் என்று அப்போதே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினார். ஆனால், அவரை நேடியாக இந்திய அணிக்கு அழைத்து சென்று ஆட வைத்து அழகு பார்த்தது தேர்வுக்குழு. இனி ஹர்திக் பாண்டியா இடத்துக்கு அவர் தான் என்றும் கூறப்பட்டது. தற்போது புயலாக வந்து புஸ்வானமாக மாறிவிட்டார் வெங்கடேஷ் ஐயர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News