ஆஃப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷாஹிதி நியமனம்!
கடந்த சில வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, சர்வதேச அரங்கில் பல சாதனைகளைச் செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரஷித் கான், முகமது நபி போன்ற தலைசிறந்த வீரர்கள் அணியில் இருப்பது தான்.
மேலும் ஆஃப்கானிஸ்தான் அணியின் நீண்ட நாள் கேப்டனாக ஆஸ்கர் ஆஃப்கான் தலைமை தாங்கி வந்தார். இடையில் முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளன. இதனால் அணியின் கேப்டனை தற்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மாற்றியுள்ளது.
அதன்படி ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக ரஹ்மத் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நட்சத்திர வீரர் ரஷித் கான் ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டி20 அணியின் கேப்டன் யார் என்பதையும் விரைவில் அறிவிக்கப் போவதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.