‘அட என்ன சொல்லுறீங்க; நிஜமாவே நான் சிங்கிள் தாங்க’ - சுப்மன் கில்

Updated: Sun, May 30 2021 13:44 IST
Image Source: Google

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திர சுப்மன் கில். இவர் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது அறிமுக வீரராக களமிறங்கினார். மேலும் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியிலும் இடம்பிடித்து, தற்போது மும்பையில் உள்ள பிசிசிஐ விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

சமீப காலமாக சுப்மன் கில்லிற்கும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாராவுக்கு காதல் இருப்பதாக சமூக வலைதளங்களில் கிசு கிசுக்கள் உலா வந்தன. கிரிக்கெட் வீரர்கள் இந்த மாதிரியான கிசு கிசுகளுக்குள் சிக்குவது இயல்பான ஒன்று தானே..

அப்படி இருக்கையில் சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சுப்மன் கில்லிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள சுப்மன் கில்,  நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னை போன்ற ஒரு குளோனிங் நபரை உருவாக்கும் எண்ணம் இல்லை என காமெடியாக பதிலளித்துள்ளார்.

சுப்மன் கில்லின் இந்த பதிலின் மூலம் அவர் இன்னும் முரட்டு சிங்கிளாக இருப்பது தெரியவந்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை