உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் டி காக் 174 ரன்கள் குவித்தார். இதையடுத்து விளையாடிய வங்கதேசம் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் மஹ்மத்துல்லா 111 ரன்கள் அடித்தார். 

Advertisement

இதையடுத்து இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐட்ன் மார்க்ரம், “இது எங்களுக்கு மற்றொரு நல்ல நாளாக அமைந்துள்ளது. இந்த போட்டியை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால் போட்டி கடைசி வரை சென்று இருந்தாலும் இறுதியில் இது நல்ல நாளாகவே அமைந்தது. எங்கள் அணியின் கடைசி கட்ட ஓவர்கள் வீசுவதில் பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்கள் அணியின் பவுலர்கள் அனைவருமே டெத் ஓவர்களில் பந்துவீச கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

இந்த போட்டியில் குவின்டன் டி காக் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று கிளாசன் விளையாடிய விதமும் அருமையாக இருந்தது. எங்கள் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் வெவ்வேறு மாதிரி விளையாடக் கூடியவர்கள். இருந்தாலும் ஒரு அணியாக நாம் அதிலிருந்து பாசிட்டிவான விசயங்களை எடுத்து வெற்றி பெறுவது தான் அவசியம். டெம்பா பவுமா இந்த போட்டியிலேயே விளையாட வருவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் நேற்று விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இல்லை. எனவே நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இணைவார்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News