பஞ்சாப் கிங்ஸில் கேஎல் ராகுல் நீடிப்பாரா? - அணி உரிமையாளர் பதில்!

Updated: Thu, Oct 28 2021 22:07 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது, 

இந்நிலையில் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டில் 15-ஆவது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் மேலும் 2 அணிகள் புதிதாக இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதன்படி சமீபத்தில் நடைபெற்று முடிந்த அணிகளின் ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை மையமாக வைத்து 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விரைவில் அணி வீரர்களுக்கான ஏலமும் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்த வேலைகளை செய்து வருகிறது. 

அதன்படி பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக தொடர்வாரா ? என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைக்கு நாங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களை குறித்து ஆலோசித்து வருகிறோம். ராகுலை தக்கவைத்தால் மட்டும் போதாது அணியில் உள்ள 11 வீரர்களும் சிறப்பாக விளையாடினால் தான் வெற்றி பெற முடியும். 

ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு கேரக்டர் உண்டு. எங்கள் அணியில் ராகுல் தக்கவைக்க படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரை தவிர்த்து மற்றவர்களையும் யோசிக்கவேண்டும். ஒரு வீரரை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய ராகுல் 62 ரன்கள் சராசரியுடன் 626 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். இதில் ஆறு அரை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை