பும்ரா விசயத்தில் அணி நிர்வாகம் தவறிழைத்து விட்டது - ஹர்பஜன் சிங்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பேட்டர்கள் சொதப்பினாலும் பந்துவீச்சில் தனி ஒருவனாக ஆஸ்திரேலிய பெட்டர்களை திணறடியத்த ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியனார். இதன்மூலம் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும், இத்தொடருக்கான தொடர்நாயகன் விருதை வென்றார். அதிலும் குறிப்பாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயத்தால் அவதிப்பட்டார்.
இதனால் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் பந்துவீச முடியாமல் போனது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அப்போட்டியில் எளிதான வெற்றியைப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து பும்ராவின் காயம் எவ்வளவு தீவிரமடைந்துள்ளது என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகததால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பும்ராவை அணி நிர்வாகம் மற்றும் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்றும், தொடர் முழுவதும் அவரை அதிகமாக சார்ந்து இருந்ததாகவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த டெஸ்ட் தொடரில் கரும்பிலிருந்து சாறு பிழிவது போல வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பயன்படுத்திவிட்டனர்.
ஏனெனில் டிராவிஸ் ஹெட் வந்தால், பந்தை பும்ராவுக்குக் கொடு, மார்னஸ் லபுஷாக்னே வந்தால் பந்தை பும்ராவுக்குக் கொடு, ஸ்டீவ் ஸ்மித் வந்தால், பும்ராவுக்கு பந்தை கொடு' என்பது போல் இருந்தது. பும்ரா மட்டும் எத்தனை ஓவர்கள் தான் வீசுவார்?. அதன் காரணமாக தொடரின் இறுதியில் அவரால் பந்துவீச முடியாத நிலைக்கு வந்துவிட்டார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி வெல்வதற்கும் வாய்ப்பு இருந்திருக்கும்.
Also Read: Funding To Save Test Cricket
அப்படி இல்லையெனினும் ஆஸ்திரேலியாவின் வெற்றியானது சற்று கடினமாக இருந்திருக்கும். ஏனெனில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு கடினமாக சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பார். ஆனால் நீங்கள் பும்ராவின் இடுப்பை உடைத்து விட்டீர்கள். அவருக்கு எத்தனை ஓவர்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்திருக்க வேண்டும். அதில் அவர்கள் தவறிழைத்து விட்டனர்” என விமர்சித்துள்ளார்.