ICC Test Rankings: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 5 இடங்களில் எந்த மாற்றும் இல்லாமல் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக் முதலிரண்டு இடங்களிலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.

Advertisement

அதேசமயம் ஹெடிங்லே டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பந்த் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்திலும், கடைசி இன்னிங்ஸில் சதம் விளாசிய இங்கிலாந்தின் பென் டக்கெட் 5 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதுதவிர்த்து இப்போட்டியில் சதம் விளாசிய இங்கிலாந்தின் ஒல்லி போப் 19ஆம் இடத்திலும், இந்திய அணியின் ஷுப்மன் கில் 20ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். 

அதேசமயல் இலங்கை - வங்கதேச டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச அணியின் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 11 இடங்களும், நாஜ்முல் ஹொசைன் சாண்டோ 21 இடங்களும் முன்னேறி 28 மற்றும் 29ஆம் இடத்தை பிடித்துள்ள நிலையில், இலங்கை அணியின் பதும் நிஷங்கா 21 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தையும், இந்திய வீரர் கேஎல் ராகுல் 10 இடங்கள் முன்னேறி 38ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தையும், காகிசோ ரபாடா இரண்டாம் இடத்தையும், பாட் கம்மின்ஸ் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். இதுதவிர்த்து மிட்செல் ஸ்டார்க், ஜெய்டன் சீல்ஸ், கஸ் அட்கின்சன், ஸ்காட் போலாண்ட் உள்ளிட்டோர் 9,10,11, மற்றும் 12ஆம் இடத்திற்கு முன்னேறிய நிலையில் ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் பின் தங்கி 13ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ராவீந்திர ஜாடேஜா முதலிடத்தையும், வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸ் இரண்டாம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சென் 3ஆம் இடத்தையும் தக்கவைத்துள்ளனர். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News