மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹீலி, மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Updated: Thu, Feb 16 2023 21:47 IST
Healy, Mooney Score Fifties As Australia Cruise To 10-Wicket Win Against Sri Lanka In Women's T20 Wo (Image Source: Google)

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி , இலங்கை மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீராங்கனைகள் மாதவி - கேப்டன் அத்தபத்து இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அத்தபத்து 16 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மாதவி 34 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய விஷ்மி 24 ரன்களிலும், ரனசிங்கே ரன் ஏதுமின்றியும், அனுஷ்கா 8 ரன்களிலும், டி சில்வா 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகான் ஸ்காட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலீசா ஹீலி - பெத் மூனி இணை அதிராடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது. 

இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மூனி 56 ரன்களையும், அலிசா ஹீலி 54 ரன்களையும் சேர்த்திருந்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை