விராட் கோலியை பாராட்டிய கௌதம் கம்பீர்; ரசிகர்கள் ஆச்சரியம்!  

Updated: Mon, Oct 23 2023 12:04 IST
Image Source: Google

நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் 20 வருடங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. இந்த வெற்றியை இந்திய அணிக்கு இந்த தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியாக பதிவாகியது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

லீக் சுற்றில் ஒன்பது ஆட்டங்களில் ஆறு ஆட்டங்கள் வெற்றி பெற்றால் ஒரு அணி அரையிறுதிக்குள் சென்று விடலாம். இந்த வகையில் தற்போது இந்திய அணி 5 வெற்றிகள் பெற்றிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை தவிர்த்து நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. 

இந்த நான்கு ஆட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆட்டத்தை வென்றால் கூட இந்திய அணி இறுதியில் இருக்கும் என்று சொல்லலாம். எனவே இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்து இருக்கிறது. நேற்றைய போட்டியில் எல்லா வீரர்களும் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை செய்து கொண்டே வர, முக்கியமான கட்டத்தில் இரண்டு ரன்களில் சூரியகுமார் ஆட்டம் இழந்ததும், போட்டியில் அழுத்தம் உருவானது. 

ஆனால் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வந்த விராட் கோலி, வழக்கம்போல் தான் சேஸ் செய்வதில் கிங் என்று நேற்று காட்டினார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறும் பொழுது “விராட் கோலியை விட சிறந்த பினிஷர் கிடையாது. பினிஷர் என்பவர்கள் ஐந்து முதல் ஏழு வரை இடத்தில் பேட்டிங் செய்பவர்கள் மட்டும் கிடையாது. விராட் கோலி ஒரு சேஸ் மாஸ்டர். அவரே ஒரு பெரிய பினிஷர். ரோஹித் சர்மா வெறுமனே ரன்கள் எடுக்கவில்லை. 

அவர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார். முகமது சமியை வெளியில் வைக்க இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய தைரியம் இருந்திருக்க வேண்டும். அவர் தொடக்கத்தில் இருந்தே விளையாடி இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்களுக்கு கடினமான தரம்சாலா மைதானத்தில் இன்று இந்தியா 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது. இதில் அவர் ஒரு ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது, அவருக்கு இருக்கும் திறமையை காட்டுகிறது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை