Hobart Hurricanes vs Sydney Sixers Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் குவாலிஃபையர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹோபர்டில் உள்ள  பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

நடப்பு பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி மற்றும் 2 போட்டி முடிவில்லை என மொத்தம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேசமயம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்து அசத்தியது. மேற்கொண்டு இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Advertisement

HUR vs SIX, BBL 2024-25: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் vs சிட்னி சிக்ஸர்ஸ் 
  • இடம்: பெல்லரிங் ஓவல், ஹோபர்ட்
  • நேரம்: ஜனவரி 21, மதியம் 1.45 மணி (இந்திய நேரப்படி)

HUR vs SIX Pitch Report

இந்த குவாலிஃபையர் ஆட்டம் ஹோபார்ட்டின் பெல்லரிங் ஓவலில் நடைபெறவுள்ளது. நடப்பு பிபிஎல் தொடரில் இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளிலும் டாஸ் வென்று பந்துவீச்சை செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

HUR vs SIX: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 20
  • ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - 10
  • சிட்னி சிக்சர்ஸ் - 09
  • முடிவில்லை - 01
Advertisement

HUR vs SIX: Where to Watch?

பிக் பேஷ் லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம். 

HUR vs SIX Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - ஜோஷ் பிலீப்
  • பேட்ஸ்மேன்கள் - மொய்சஸ் ஹென்ரிக்ஸ், காலேப் ஜுவல், டிம் டேவிட், மிட்செல் ஓவன் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - கிறிஸ் ஜோர்டான், நிகில் சவுத்ரி, ஜாக் எட்வர்ட்ஸ் (துணை கேப்டன்), ஹெய்டன் கெர்
  • பந்து வீச்சாளர்கள் - பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ்
Advertisement

Hobart Hurricanes vs Sydney Sixers Probable Playing XI

Hobart Hurricanes Probable Playing XI: காலேப் ஜுவல், மிட்செல் ஓவன், சார்லி வாக்கிம், பென் மெக்டெர்மாட், நிகில் சவுத்ரி, மேத்யூ வேட், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், நாதன் எல்லிஸ் (கே), கேமரூன் கேனன், ரைலீ மெரிடித்.

Sydney Sixers Probable Playing XI : ஜோஷ் பிலிப், கர்டிஸ் பேட்டர்சன், ஜாக் எட்வர்ட்ஸ், மொய்சஸ் ஹென்ரிக்ஸ் (கே), ஜோர்டான் சில்க், லாச்லன் ஷா, ஜோயல் டேவிஸ்/பென் மனென்டி, பென் துவார்ஷுயிஸ், ஹேய்டன் கெர், மிட்செல் பெர்ரி, ஜாஃபர் சவுகான்.

Advertisement

HUR vs SIX Dream11 Prediction, HUR vs SIX Dream11 Team, Today Match HUR vs SIX, BBL 2024-25, Fantasy Cricket Tips, HUR vs SIX Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Hobart Hurricanes vs Sydney Sixers

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News