இதுதான் ஷுப்மன் கில்லை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது - ஹர்பஜன் சிங்!

Updated: Tue, Jul 18 2023 14:26 IST
Image Source: Google

இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்பொழுது தொடரில் முன்னிலை வகிக்கிறது. நடத்த முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வழக்கமான இந்திய அணியின் டெஸ்ட் துவக்க ஆட்டக்காரராக இருந்து வந்த இளம் வீரர் ஷுப்மன் கில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கேட்டு தன்னை மூன்றாவது இடத்திற்கு பேட்டிங்கில் கீழே இறக்கிக் கொண்டார்.

கில் உடைய இடத்திற்கு இந்த டெஸ்ட் தொடரில் முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்ட ஈழம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டு விளையாட வைக்கப்பட்டார். அவர் தனது முதல் வாய்ப்பிலேயே 350க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர் கொண்டு 171 ரன்கள் குவித்து அசத்தலான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தமாக எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டி நடந்த ஆடுகளத்தில், நின்றால் மட்டுமே ரன்கள் வரும் இல்லை என்றால் கடினம் என்கின்ற சூழல்தான் இருந்தது. அப்படியான ஒரு நிலையில் மூன்றாவது வீரராக வந்த கில் ஆறு கண்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஆசியாவுக்கு வெளியே அவர் ஆறு ஏழு போட்டிகளில் எதிர்கொண்ட பந்துகளை விட, முதல் வாய்ப்பில் ஜெய்ஸ்வால் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 

இதன் காரணமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், கில் இந்திய டெஸ்ட் அணிக்கு தகுதியானவர் கிடையாது; அவருக்கு தெரிந்தவர்கள் அணியில் இருப்பதால் அவரும் இருக்கிறார் இது ஃபேவரிட்டிசம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிப்பது போல பேசியுள்ள ஹர்பஜன் சிங் “கில் மிகவும் ஆர்வமுள்ள ஒரு இளைஞர். அவர் எதையும் கற்றுக் கொள்வதற்கு மிகவும் பசியுடன் இருக்கக்கூடியவர். ஏனென்றால் ஏதாவது தன்னால் செய்ய முடியும் செய்தே ஆக வேண்டும் என்கின்ற நம்பிக்கை கொண்டவர். இதுதான் அவரை மற்ற இளம் வீரர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. அவரின் கிரிக்கெட்டுக்காக அவரது தந்தை உழைத்த உழைப்புக்கு அவர் 15 முதல் 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடினால்தான் அதன் பயனை திரும்ப எடுக்க முடியும். 

அவருக்கு நல்ல திறமையும் மனப்போக்கும் இருக்கிறது. அவர் சிறந்த வீரர். அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது மகிழ்ச்சியானது. அவர் பல வருடங்கள் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவார். ஒருநாள் கேப்டனாகவும் அணியை வழி நடத்துவார். அப்போதுதான் அவரது தந்தை திருப்தி அடைவார். அந்த திருப்தி அவருக்கும் பஞ்சாப் அணிக்கும் இருக்கும். ஏனென்றால் அவர் எங்கள் மகன்” என்று கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை