அணியை மீண்டும் வழிநடத்த மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் - தஹ்லியா மெக்ராத்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது நாளை (மார்ச் 21) தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து மகளிர் அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய கையோடும், ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளன.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ரா, “அணியை மீண்டும் வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். துணை கேப்டன் ஆஷ்லே கார்ட்னருடன் ஆஷுடன் பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிக்கிறேன்.
ஒரு குழுவாக இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய நாங்கள் நியூசிலாந்திலும் தொடர் வெற்றியைப் பதிவுசெய்து சீசனை உச்சத்தில் முடிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் எதிருவரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக எங்களுக்கு மூன்று டி20 போட்டிகள் மட்டுமே உள்ளது. ஆனால் இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும், ஏனெனில் நாங்கள் உலகக் கோப்பைக்கு முன் சர்வதேச அட்டவணையில் அதிக டி20 போட்டிகள் இல்லாதது எங்களுக்கு பலனளிக்கும்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆஸ்திரேலிய சட்டையை அணியும்போது, ஒரு குழுவாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட இது ஒரு நல்ல வாய்ப்பாகும். நியூசிலாந்து அணியும் முழு பலத்துடன் திரும்பி வந்துள்ளனர். நாங்கள் மிகவும் கடினமான போட்டியை எதிர்பார்க்கிறோம். மேலும் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகள் நடைபெற இருப்பதால் மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் இருக்கும். அதில் சிலர் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவை கொடுப்பார்கள் என்று நம்பிகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய மகளிர் டி20 அணி: தஹ்லியா மெக்ராத் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், டார்சி பிரவுன், நிக்கோல் ஃபால்டம், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்