நானும் கோலியும் ஒருசில ஓவர்கள் வீசவுள்ளோம் - ரோஹித் சர்மா!
வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாள், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.
ஏற்கனவே இந்தியா தவிர மற்ற அணிகள் தங்களது வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா மட்டுமே வீரர்களை அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், இன்று டெல்லியில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் மீட்டிங் நடந்தது. இதையடுத்து, பிற்பகல் 1.30 மணிக்கு இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது ரோஹித் சர்மா பேசுகையில், “இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவின் ரோலில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால், அணியின் பேலன்ஸ் சீராக இருக்கும். ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கையில் விளையாடப்பட உள்ளதால், எவ்வித சாதகமும் இந்திய அணிக்கு இல்லை. அதேபோல் அண்டர் டாக்ஸ் என்றும், கோப்பையை வெல்லும் அணி என்றும் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது.
என்னை பொறுத்தவரை ஒரு தொடருக்காக ஒரு அணி எப்படி தயாராகிறது என்பதும், அழுத்தமான சூழல்களில் எப்படி செயல்படுகிறது என்பதும் தான் முக்கியம். அதனை ஒரு அணியாக இணைந்து சிறப்பாக செய்ய விரும்புகிறேன். இந்திய அணியில் நம்பர் 4இல் விளையாடும் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை டாப் 3க்கு கீழ் விளையாடும் அனைத்து பேட்ஸ்மேன்களாலும் நம்பர் 4 பேட்ஸ்மேனாக தான் இருக்கிறார்கள்.
ஏனென்றால் காயமடைந்த வீரர்கள், ஓய்வு கொடுக்கப்பட்ட வீரர்கள் என்று பலரும் நம்பர் 4இல் விளையாடி இருக்கிறார்கள். உலகக்கோப்பைத் தொடருக்கு முன் 9 ஆட்டங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு இந்திய அணியின் காம்பினேஷன் தெரிந்துவிடும். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய அணியில் ஏராளமான பேட்ஸ்மேன்களால் பந்துவீச முடிந்தது. ஆனால் தற்போதைய வீரர்களை வைத்தே திட்டமிட வேண்டிய சூழல் இருக்கிறது. யாராலும் ஒருநாள் இரவில் பந்துவீச்சாளராக மாற்றிட முடியாது.
நல்ல விஷயம் என்னாவென்றால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் பந்துவீச முடியும் என்று கிண்டலாக கூறினார். அதேபோல், கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் அனைத்து வீரர்களும் அனைத்து இடங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்றே கூறி வருகிறோம். அதற்கேற்ப திட்டமிட்டு விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.