ரோஹித் கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி!
டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்தார். ஒருநாள் போட்டிகளில் இருந்து பிசிசிஐ அவரை தானாகவே அவரை நீக்கி ரோஹித் சர்மாவிற்கு கேப்டன்சியை வழங்கியது. சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித்தை அறிவித்தது பிசிசிஐ.
இதன் மூலம் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டியிலும் ரோஹித் சர்மா இந்திய அணியை அணியை வழிநடத்த உள்ளார். இருப்பினும், ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக உடற்தகுதி பிரச்சைகளில் இருந்து வருகிறார்.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேஸ்மென் தினேஷ் கார்த்திக் ரோஹித்தின் முழு நேர கேப்டன் பொறுப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "ரோஹித் மிகப்பெரிய சந்திரசாலி. இனி அவர் விளையாடும் கிரிக்கெட், மூன்று வடிவங்களிலும் எவ்வளவு சீராக விளையாட முடியும் என்பதை வரையறுக்கும். ரோஹித் இந்திய அணிக்காக ஆண்டு முழுவதும் நிறைய கிரிக்கெட் விளையாட வேண்டிய இடத்தில் இருக்கிறார்.
ரோஹித் போன்ற ஒரு பேட்ஸ்மேனுக்கு இது பெரிய சவாலாக இருக்கும். அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரைப் பயன்படுத்திய விதத்திற்காக ரோஹித்தை பாராட்டியே ஆகா வேண்டும். ரோஹித் சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களை சுழற்றினார். முக்கியமான நேரத்தில் அவேஷ் கானைக் கொண்டு வந்தார்.
மேலும், ஷர்துல் தனது முதல் ஓவரில் 18 ரன்கள் கொடுத்தார், ஆனால் 4/33 என்ற எண்ணிக்கையுடன் முடித்தார். ரோஹித் பந்துவீச்சாளர்களைப் புரிந்துகொண்டு அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்பவர். இருப்பினும் ரோஹித் எவ்வளவு கிரிக்கெட் விளையாடப் போகிறார்? என்ற கேள்வி எப்போதும் இருக்கும்," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.