இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான் - டேவிட் வார்னர்!

Updated: Mon, Jan 01 2024 12:44 IST
இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான் - டேவிட் வார்னர்! (Image Source: Google)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர். தொடக்க வீரராக களமிறங்கும் இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தற்போது அறிவித்துள்ளார் வார்னர். 

இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 161 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 22 சதங்களுடன் 6,932 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள வார்னர் ஒருநாள் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சிட்னி மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டேவிட் வார்னர், “டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல, ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான். ஓய்வு முடிவை அறிவித்தால் உலகம் முழுவதும் நடக்கும் டி20 மற்றும் டி10 லீக் போட்டிகளில் விளையாட முடியும். இதன் மூலமாக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எதிர்காலத்திற்குத் தேவையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும்.

அடுத்ததாக சாம்பியன்ஸ் கோப்பை வருகிறது என்பதை நான் அறிவேன். ஒருவேளை அடுத்த 2 வருடங்களில் நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவுக்காக கண்டிப்பாக அத்தொடரில் விளையாடுவதற்கு தயாராக இருப்பேன். அதே போல அடுத்த வரும் பிக்பேஷ் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன். 

அதற்குப் பின்னே இருக்கும் சர்ச்சைகள் என்னை அதை செய்வதற்கு அனுமதித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள அடுத்த டெஸ்ட் தொடரில் நான் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருப்பேன். பிபிஎல் தொடருக்கு பின் ஐஎல்டி20 தொடரில் விளையாட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை