IND vs SA: அணியில் சில குறைகள் இருக்கிறது - ரோஹித் சர்மா!

Updated: Wed, Oct 05 2022 08:56 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக் 68 ரன்களும், ரூஸோவ் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களும் எடுத்தனர். ஸ்டப்ஸ் 23, மில்லர் 19 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், 20 ஓவர்களில் அந்த அணி 227 ரன்களை குவித்து அசத்தியது.

அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 46, தீபக் சஹார் 31, ரிஷப் பந்த் 27 ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையில் ரோஹித் 0, ஷ்ரேயஸ் ஐயர் 1, சூர்யகுமார் யாதவ் 8 போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். 

இதனால், இந்திய அணி 18.3 ஓவர்களில் 178/10 ரன்களை மட்டும் சேர்த்து, 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இப்போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா, ‘‘இப்போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு பொருட்டே அல்ல என போட்டி துவங்குவதற்கு முன்பு வீரர்களிடம் தெரிவித்தேன். தங்களை தாங்களே மேம்படுத்திக்கொள்ள இது சரியான வாய்ப்பு. அணியில் சில குறைகள் இருக்கிறது. சூர்யகுமார் யாதவின் பார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது.

அதன்பின், சும்மா சொன்னேன்…இந்திய அணியில் பந்துவீச்சு துறைதான் பிரச்சினையாக இருக்கிறது. அதனை டி20 உலகக் கோப்பைக்கு முன்பே சரிசெய்துவிடுவோம் என நம்புகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு முன்கூட்டியே செல்ல காரணம், அணியில் இருக்கும் வீரர்களில் 7-8 பேர் மட்டுமே இதற்குமுன் ஆஸியில் விளையாடியிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு மைதானங்கள் புதிது.

இதனால்தான், முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு சென்று சில பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளோம். பவுன்சருக்கு பேர்போன பெர்தில் விளையாட விரும்புகிறோம். பும்ரா விலகிவிட்டார். அவருக்கான மாற்று பௌலரை இன்னமும் தேர்வு செய்யவில்லை. ஆஸி பிட்ச்களில் அனுபவம் வாய்ந்தவர்களை பரிசீலித்து வருகிறார்கள். எந்த பௌலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை’’ எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை