இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்திருந்தாலும், நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று அந்த உத்வேகத்துடன் உலககோப்பை தொடரை அணுகவுள்ளது.

Advertisement

அதன்படி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது சிறப்பான பேட்டிங்கின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் குவித்தது.

Advertisement

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் 4 வீரர்களான ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை வீழ்த்திய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 10 ஓவர் வீசிய மேக்ஸ்வெல் 40 ரன்கள் விட்டு கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய மேக்ஸ்வெல், “நான் பந்துவீச்சுக்காக நிறையவே பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் எனக்கு பின்னடைவு ஏற்படுத்தியிருந்தாலும் அதன் பிறகு நாடு திரும்பி நான் சிகிச்சை மேற்கொண்டேன். எனக்கு எப்பொழுதுமே பயணம் செய்வதில் எந்த ஒரு சிக்கலும் வந்தது கிடையாது. மற்றவர்களை போன்று அல்லாமல் நான் எங்கு சென்றாலும் சிறப்பாக விளையாடவே முயற்சிப்பேன். 

அந்த வகையில் இந்தியாவிலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் மிட்சல் மார்ஷ் பந்துவீச வராததால் எனக்கு நிறைய ஓவர்கள் வீச வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் நான் அதையும் விரும்பி செய்து வருகிறேன். உலகக்கோப்பை தொடருக்கான எனது ரோல் ஆல் ரவுண்டராக அதிக ஓவர்களை வீசுவது தான். 

அந்த வகையில் நான் அணிக்காக எனது பங்களிப்பை வழங்குவதில் தயாராக இருக்கிறேன். இப்பொழுது நான் அணிக்கு எந்த வகையிலும் பங்களிப்பினை வழங்க தயாராக இருப்பதினால் அது உலகக் கோப்பை தொடரிலும் உதவும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News