இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது.இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் முதல் போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் த்ரில் வெற்றியை பெற்றன.

Advertisement

இதனைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் துவங்கி நடைபெற்ற நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் விளாசி அணி 200+ ரன்களை கடப்பதை உறுதி செய்தார். இறுதியில் இந்தியா மெகா வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

Advertisement

மூன்று ஒருநாள் போட்டிகளும் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் கௌகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் மதியம் 1:30 மணிக்கு நடைபெறும். இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர்.

அதேசமயம் ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் போன்றவர்களும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கு முன், இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, இனி நீங்கள் டி20 அணியில் விளையாட மாட்டீர்களா? என நிரூபர் கேட்ட கேள்விக்கு, “இதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுபவர் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியாது. ஓய்வு தேவை. அவ்வளவுதான். அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இருக்கிறது. மேலும், ஐபிஎல் முடிந்தும் பல டி20 தொடர்கள் இருக்கிறது. இப்போது பார்த்துக்கொள்ளலாம்.

ஒருபோதும் நான் பின் வாங்க மாட்டேன். நிச்சயம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவேன். அவ்வபோது ஓய்வு எங்களுக்கு முக்கியம். ஆகையால், ஓய்வில் இருந்தால், இனி டி20 தொடர்களில் விளையாட மாட்டோம் என அர்த்தம் இல்லை” என்று தெரிவித்தார்.

Advertisement

 

அதன்பின் நாளைய போட்டியில் உங்களுடன் ஓபனர் யார்? கில்லா, இஷான் கிஷனா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, ‘‘ஷுப்மன் கில்லிற்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என நினைக்கிறோம். நாளை அவர்தான் களமிறங்குவார்’’ எனத் தெரிவித்தார். இஷான் கிஷன் சமீபத்தில், வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து, முரட்டு ஃபார்மில் இருக்கும் நிலையில், அவரை புறக்கணித்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News