இதனை சச்சினிடம் தான் கற்றுக்கொண்டேன் - வீரேந்திர சேவாக் ஓபன் டாக்!

Updated: Wed, Jun 09 2021 14:53 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக இருந்த வீரேந்திர சேவாக். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பல முறை தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற வைத்துள்ளார். 

மேலும் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்தார். இதுவரை இந்திய  அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒருநாள், 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக், 17 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதமும், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும் விளாசியுள்ளார்.

இந்நிலையில், வீரேந்திர சேவாக் தான் நேராக டிரைவ் அடிக்க சச்சினிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சேவாக்,  “1992 ஆம் ஆண்டு நான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து வருகிறேன். அப்போது நான் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து நேரால டிரைவ் விளையாடக் கற்றுக்கொண்டேன். பின் நாள்களில் அது எனக்கும் மிகவும் உதவியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்காக சச்சின் - சேவாக் இணை நீண்ட நாள் தொடக்க வீரர்களாக களமிறங்கி பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை