பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி கமிந்து மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா ஆகியோரது அபாராமான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ் இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன், முதல் விக்கெட்டுக்கு 109 ரன்களைச் சேர்த்தனர். இதில் இவரும் தங்களது அரைசதங்களையும் கடந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த எவின் லூயிஸ் 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப் 9 ரன்களில் நடையைக் கட்ட, பிராண்டன் கிங் 63 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 19 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் 13 ரன்னிலும் என ஆட்டமிழந்தாலும், இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பிராண்டன் கிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நியில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இலங்கை கேப்டன் சரித் அசலங்கா, “வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டர்களுக்கு நான் பெருமை சேர்க்க வேண்டும், ஆனால் பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் இன்னும் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன், சமிந்துவிடம் இருந்து சில ஓவர்கள் வேண்டும், அது இன்று வேலை செய்யவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
அடுத்த போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்களை முயற்சிப்போம். நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும். ஒரு கேப்டனாக இது தான் என்னுடைய முக்கிய கவலை. அதனால் இனி வரும் போட்டிகளில் கூடுதல் கனத்துடன் நாங்கள் விளையாட முயற்சி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.