16ஆவது சீசனுக்கான தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது கடந்த 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல வெளிநாட்டு வீரர்கள் கோடி கணக்கில் ஏலத்தில் சென்றனர். அதேவேளையில் இந்திய வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

Advertisement

405 வீரர்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஏலத்தில் இந்திய வீரர்களும் கணிசமான தொகைக்கு ஏலம் போனார்கள். அந்தவகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் 5 சதங்களை விளாசிய தமிழக வீரர் ஜெகதீசனை எடுக்க சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

Advertisement

 இந்த ஏலத்தில் 20 லட்சம் என்கிற அடிப்படை விலையில் கலந்துகொண்ட ஜெகதீசனை கொல்கத்தா அணி 90 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. 

இந்நிலையில், எதிர்வரும் சீசனில் விளையாடயிருப்பது குறித்து பேசிய தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன்,“ஒவ்வொரு வீரருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அந்தவகையில் நானும் அடுத்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்னை அணியில் நான் இருந்த வரை தோனியிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அவற்றை எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்தி உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News