ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!

Updated: Mon, Jul 05 2021 23:00 IST
Image Source: Google

ஐபிஎல் 2021 சீசன் இந்தியாவில் நடைபெற்றது. ஐபிஎல் தொடருக்கு முன் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது காயமடைந்தது. 

அவரது காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2021 சீசனில் விளையாடமாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ரிஷாப் பண்ட் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடியது. அதில் 8 போட்டிகளில் 6-ல் வெற்றிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துவிடும்.

ஆனால் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று பராவல் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

இருப்பினும் எஞ்சியுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். 

ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவேன் என அவரே தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லிக்கு அணிக்கு திரும்பினால், யாரை கேப்டனாக செயல்பட வைப்பது என்ற தலைவலி அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவி குறித்து எனக்குத் தெரியாது. அது உரிமையாளர்கள் கையில் உள்ளது. ஆனால், டெல்லி அணி சிறப்பாக விளையாடி முதலிடத்தில் உள்ளது. இதுதான் எனக்கு முக்கியமான விசயம். என்னுடைய இலக்கே, டெல்லி அணிக்கு முதன்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான்’’ என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை