ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 அணி 2023: கேப்டன்களாக சூர்யகுமார் யாதவ், சமாரி அத்தபத்து நியமனம்!

Updated: Mon, Jan 22 2024 16:08 IST
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 அணி 2023: கேப்டன்களாக சூர்யகுமார் யாதவ், சமாரி அத்தபத்து நியமனம்! (Image Source: Google)

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனைகளைக் கொண்டு டி20 அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் டி20 அணிகளை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி ஆடவர் அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 வீரரான சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரவிஸ் பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங் உள்பட 4 இந்திய வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து இங்கிலாந்தின் பில் சால்ட், வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ரஸா, உகாண்டாவின் அல்பேஷ் ரம்ஜானி ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அதேபோம் மகளிர் அணியில் இந்தியாவைச் சேர்ந்த தீப்தி சர்மா மட்டுமே இடம்பிடித்துள்ளார். அதேசமயம் பெத் மூனி, எல்லிஸ் பேரி, ஆஷ்லே கார்ட்னர், மேகன் ஷாட் என 4 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த அணியின் கேப்டனாக இலங்கைச் சேர்ந்த சமாரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆண்டின் சிறந்த டி20 அணி (ஆடவர்): யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பில் சால்ட் (இங்கிலாந்து), நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன், இந்தியா), மார்க் சாம்ப்மென் (நியூசிலாந்து), சிக்கந்தர் ரஸா (ஜிம்பாப்வே), அல்பேஷ் ரம்ஜானி (உகாண்டா), மார்க் அதிர் (அயர்லாந்து), ரவி பிஷ்னோய் (இந்தியா), ரிச்சர்ட் ந்ங்க்வாரா (ஜிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).

ஆண்டின் சிறந்த டி20 அணி (மகளிர்): சமாரி அத்தபத்து (கேப்டன், இலங்கை), பெத் மூனி (ஆஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), ஹேய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து), அமிலியா கெர் (நியூசிலாந்து), எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), ஆஷ்லே கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தீப்தி சர்மா (இந்தியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), மேகன் ஷாட் (ஆஸ்திரேலியா).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை