ஐசிசியின் தலைவராக மீண்டும் தேர்வானார் கிரேக் பார்கிளே - தகவல்!

Updated: Sat, Nov 12 2022 12:32 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி 2016ஆம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2018 மே மாதம், ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வானார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்தது. 

மனோகரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த 2020 நவம்பர் மாதம் ஐசிசி அமைப்பின் வாரியம் சாரா 2ஆவது தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே தேர்வானார். 2012 முதல் நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராகவும் 2015 உலகக் கோப்பைப் போட்டியின் இயக்குநராகவும் அவர் பணியாற்றினார்.

இந்நிலையில் ஐசிசி தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த இரு வருடங்களுக்கு இப்பதவியில் அவர்  நீடிப்பார். 

ஜிம்பாப்வேயின் முக்லானி போட்டியிலிருந்து விலகியதால் கிரேக் பார்கிளே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐசிசி குழுவில் உள்ள 17 வாக்குகளில் 12 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெறுபவராக இருந்த காரணத்தால் போட்டியின்றி அவர் தேர்வாகியுள்ளதாகவும் தெரிகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::