ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி புனேவில் உள்ள மகாராஷ்டிராக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - தன்ஸித் ஹசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தலா 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தாஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

பின் நஹ்முல் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய தாஹித் ஹிரிடோய் அரைசதம் கடந்தார். அதன்பின் களமிறங்கிய மஹ்முதுல்லா 32 ரன்களுக்கும், முஷ்பிக்கூர் ரஹிம் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த தாஹித் ஹிரிடோய் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் இறுதியில் அதிரடியாக விளையாடிய மெஹதி ஹசன் மிராஸ் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பா, சீன் அபேட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News