ஐசிசி உலகக்கோப்பை & சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள்: 2024 - 2031

Updated: Tue, Nov 16 2021 19:21 IST
ICC men's white-ball events from 2024-2031 (Image Source: Google)

2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு அடுத்ததாக 2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவிலும், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் தொடரும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.  

இந்நிலையில் 2024-31 காலகட்டத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள் குறித்த விவரங்களை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

இதில் 2024-31 காலகட்டத்தில் 2 ஒருநாள் உலகக் கோப்பை, 4 டி20 உலகக் கோப்பை, 2 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி 2026 டி20 உலகக் கோப்பை, 2029 சாம்பியன்ஸ் கோப்பை, 2031 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய தொடர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. 

மேலும் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. அதேசமயம் அமெரிக்காவும் நமீபியாவும் முதல்முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தவுள்ளன. 

Also Read: T20 World Cup 2021

ஐசிசி உலகக்கோப்பை & சாம்பியன்ஸ் கோப்பை தொடர்கள்: 2024 - 2031

  • 2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்
  • 2025 சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தான்
  • 2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா, இலங்கை 
  • 2027 ஒருநாள் உலகக் கோப்பை: தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா 
  • 2028 டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து 
  • 2029 சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா 
  • 2030 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து 
  • 2031 ஒருநாள் உலகக் கோப்பை: இந்தியா, வங்கதேசம் 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை