ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்நிலையில் புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணரத்னே - பதும் நிஷங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் நிஷங்காவுடன் இணைந்த கேப்டன் குசால் மெண்டீஸும் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதும் நிஷங்கா 46 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேப்டன் குசால் மெண்டிஸும் 39 ரன்களுக்கு  ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 36, சரித் அசலங்கா 22, தனஞ்செயா டி சில்வா 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - மஹீஷ் தீக்‌ஷனா இணை ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதில் அதிரடியாக விளையாடிய தீக்‌ஷனா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.  அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னார் களமிறங்கிய வீரர்களாலும் பெரிதளவில் சோபிக்க முடியாததால், இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே தில்ஷன் மதுஷங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மத் ஷா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியனர்.

Advertisement

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மத் ஷா அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரிகளுடன் 62 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஷாஹிதி ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஒமர்ஸாய் சிக்சர்களைப் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.  இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களுடனும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 73 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியளிலும் 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News