ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

Advertisement

இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து
  • இடம் - ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானம், தர்மசாலா
  • நேரம் - காலை 10.30 மணி (GMT 0500)

போட்டி முன்னோட்டம்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முதலிரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அதன்பின் தோல்வியிலிருந்து மீண்ட அந்த அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று சாம்பியன் அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சில் ஆடம் ஸாம்பா தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறர். அவருடன் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

மறுபக்கம் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தொடரின் ஆரம்பத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியான வெற்றிகளைக் கொடுத்தது. ஆனால் கடைசியாக இந்திய அணியுடன் விளையாடிய போட்டியில் அந்த அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவி, இத்தொடரில் தங்களது முதல் தோல்வியைச் சந்தித்தது.

அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டெரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ் ஆகியோரும்,  பந்துவீச்சில் மிட்செல் சாண்ட்னர், டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோரும் உள்ளது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கேப்டன் டாம் லேதம், லோக்கி ஃபர்குசன் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

பிட்ச் ரிப்போர்ட் 

Advertisement

தரம்சாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கு குளிரான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்பதால் ஸ்விங் பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே சூழ்நிலைகளை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினால் எளிதாக பெரிய ரன்களையும் குவிக்கலாம். அதே சமயம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -  141
  • ஆஸ்திரேலியா - 95
  • நியூசிலாந்து - 39
  • முடிவில்லை - 07

உத்தேச லெவன் 

Advertisement

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.

நியூசிலாந்து: டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன், டிரென்ட் போல்ட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவோன் கான்வே
  • பேட்ஸ்மேன்கள்- டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டேரில் மிட்செல்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல் (துணை கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- மிட்செல் ஸ்டார்க், டிரென்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, மாட் ஹென்றி
Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News