ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

இதில் நியூசிலாந்து அணி தங்கள் விளையாடிய முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி முதல் போட்டியில் வெற்றியையும், இரண்டாவது போட்டியில் தோல்வியையும் பெற்றுள்ளது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இலங்கை
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)   

போட்டி முன்னோட்டம்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளடது. நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் நாளை களமிறங்கவுள்ளது. அந்த அணியில் கான்வே, ரவீந்திரா, வில்யங், மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் போல்ட், ஹென்றி, சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. இதனால் வங்கதேச அணி 2ஆவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் பலம் வாய்ந்த நியூசிலாந்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியதிருக்கும். அந்த அணியில் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹூசன் சாண்டோ, முஷ்பிக்கூர் ரஹ்மான், மெஹதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷொரிபுல் இஸ்லாம் ஆகிய வீரர்கள் உள்ளனர். இதனால் நாளைய போட்டியில் நிச்சயம் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆரம்பக்கட்ட ஓவர்களில் சூழ்நிலைகளை புரிந்து நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். ஆனால் மேலும் செல்ல செல்ல இங்குள்ள பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறி சேசிங் செய்வதற்கு சமமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதனாலேயே இங்கு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 231 ரன்களாக இருக்கும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2ஆவது இன்னிங்ஸில் 218 ரன்கள் குறைகிறது. மேலும் இங்கு 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 8 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 41
  • நியூசிலாந்து - 30 
  • வங்கதேசம் - 10
  • முடிவில்லை - 01
Advertisement

உத்தேச லெவன் 

நியூசிலாந்து: டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லேதம் (கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன், டிரென்ட் போல்ட்.

வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கே), மெஹிதி ஹசன், முஷ்ஃபிக்கூர் ரஹீம், தஹீத் ஹரிடோய், மெஹிதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான்.

Advertisement

ஃபேண்டஸ் லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டாம் லாதம், டெவோன் கான்வே
  • பேட்ஸ்மேன்கள்- நஸ்முல் ஹொசைன் சாண்டோ, கிளென் பிலிப்ஸ்
  • ஆல்-ரவுண்டர் - ஷகிப் அல் ஹசன் (துணை கேப்டன்), மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மெஹிதி ஹசன், ரச்சின் ரவீந்திரா, மெஹிதி ஹசன் மிராஜ்
  • பந்துவீச்சாளர்கள்- மாட் ஹென்றி, ஷோரிஃபுல் இஸ்லாம்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News