ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்நிலையில் புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணரத்னே - பதும் நிஷங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் நிஷங்காவுடன் இணைந்த கேப்டன் குசால் மெண்டீஸும் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதும் நிஷங்கா 46 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் கேப்டன் குசால் மெண்டிஸும் 39 ரன்களுக்கு  ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 36, சரித் அசலங்கா 22, தனஞ்செயா டி சில்வா 14 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - மஹீஷ் தீக்‌ஷனா இணை ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதில் அதிரடியாக விளையாடிய தீக்‌ஷனா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.  அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னார் களமிறங்கிய வீரர்களாலும் பெரிதளவில் சோபிக்க முடியாததால், இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News