ஐசிசி விருது: ஜன. மாதத்தின் சிறந்த வீரராக கீகன் பீட்டர்சன் தேர்வு!

Updated: Mon, Feb 14 2022 15:46 IST
ICC Player of the Month: Keegan Petersen takes men's accolade for January 2022; Heather Knight for w
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். 

இந்த ஐசிசி விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவர் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலுக்கு தென் ஆப்பிரிக்காவின் அண்டர் 19 வீரர் டெவால்ட் ப்ரீவிஸ், வங்கதேசத்தின் எபோட் ஹொசைன், தென் ஆப்பிரிக்காவிம் கீகன் பீட்டர்சன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. 

இதில் தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருது பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், இலங்கையின் சமாரி அட்டபட்டு, வெஸ்ட் இண்டீஸின் டேண்ட்ரா டோட்டின் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைகப்பட்டது.

இதில் இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் ஜனவரி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை