அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஹசீபுல்லா கானின் அபார சதத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஹசீபுல்லா கான் 135 ரன்களும், இர்ஃபான் கான் 75 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் அலெக்ஸ் ஃபாலோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி 42.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. 

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட் லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது.

எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News