Advertisement
Advertisement

Wi vs sco

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை!

By Bharathi Kannan May 08, 2024 • 13:02 PM View: 61

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள இரு அணிகளைத் தேர்வு செய்ய குவாலிஃபையர் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை மற்று ஸ்காட்லாந்து அணிகள் முன்னேறியதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளன. 

இந்நிலையில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்றுக்கு தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை மகளிர் அணிக்கு விஷ்மி குனரத்னே - கேப்டன் சமாரி அத்தப்பத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷ்மி குனரதேன் 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதா 8 ரன்களிலும், கவிஷா தில்ஹாரி 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Related Cricket News on Wi vs sco