டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - கர்ட்லி ஆம்ரோஸ்

Updated: Sun, May 09 2021 14:15 IST
If Fit, Jasprit Bumrah Can Take More Than 400 Test Wickets: Curtly Ambrose (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் அஜிங்கியே ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நல்ல உடற்தகுதியில் இருந்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆம்ரோஸ், “ஜஸ்பிரித் பும்ரா நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் 400 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். ஏனெனில் அவர் உலக தர மிக்க பந்துவீச்சாளர். பந்தை ஸ்விங் செய்வதும், துல்லியமான யார்க்கர்களை வீசுவதன் மூலமும் அவரால் இந்த இலக்கை குறுகிய காலத்திலேயே அடைய முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 போட்டிகளில் பங்கேற்று 83 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை