விராட் கோலியுடன் பேச 20 நிமிடம் போதும் - சுனில் கவாஸ்கர்!

Updated: Tue, Jul 19 2022 10:28 IST
"If I Get 20 Minutes With Him...": Sunil Gavaskar On How He Can Help Virat Kohli (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-2 சமன் செய்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த சுற்றுப் பயணத்தில் பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் இருந்தது. அதேபோல் பேட்டிங்கிலும் இந்தியா சிறப்பாகத்தான் செயல்பட்டது. பீல்டிங்கும் ஒருசில நேரத்தை தவிர அபாரமாகத்தான் இருந்தது.

இருப்பினும் விராட் கோலியின் ஆட்டம்தான் இங்கு மீண்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஐபிஎல் முடிந்தப் பிறகு கிட்டதட்ட ஒருமாத ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர் 11, 20 போன்ற சொற்ப ரன்களை மட்டுமே சேர்த்தார். மேலும் டி20 தொடரிலும் இரண்டு இன்னிங்ஸ்களில் 12 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, ஒருநாள் தொடரில் 17, 16 போன்ற சொற்ப ரன்களை மட்டும் சேர்த்து, மீண்டும் சொதப்பினார். 2019ஆம் ஆண்டிற்கு பிறகு 78 சர்வதேச இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள கோலி, அதில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த விமர்சனமும் கோலிமீது இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “கோலியுடன் தனியாக அமர்ந்துபேச 20 நிமிடம் கிடைத்தால் போதும். அவர் பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து என்னால் தெளிவாக விளக்க முடியும். குறிப்பாக ஆஃப் ஸ்டெம்ப் லைனில் அவர் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து பேசுவேன்.

கோலி தொடர்ந்து ஆஃப் ஸ்டெம்ப் லைனில்தான் ஆட்டமிழந்து வருகிறார். அது இவருடைய பலவீனமாக மாற ஆரம்பித்துள்ளது. அவர் முதல் போட்டியில் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் ஆட்டமிழந்த பிறகு, அடுத்த போட்டியில் அதே மாதிரி வரும் பந்துகளுக்கு எதிராக பெரிய ஷாட் அடிப்பதில்லை

இது அனைத்து பேட்டர்களும் செய்யும் விஷயம்தான். அந்த தவறை கோலியும் செய்யக் கூடாது. அவர் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் சிறப்பாக விளையாட கூடியவர். அவுட் ஆனாலும் பரவாயில்லை என தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அப்படி செய்தால், நிச்சயம் ரன்கள் வரும்’’ எனத் தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை