ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதைனையடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் குசால் பெரேரா 5 ரன்னிலும், முகமது வசீம் 18 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் பான்டன் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களியும் பதிவுசெய்து அசத்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 109 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். 

Advertisement

அதன்பின் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 74 ரன்களை எடுத்திருந்த நிலையில் டாம் பான்டனும் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் கீரேன் பொல்லார்ட் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவ்லியன் திரும்பினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை சேர்த்தது. துபாய் அணி தரப்பில் குல்பதின் நைப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய பென் டங்க் 10 ரன்களுக்கும், பிராண்டன் மெக்முல்லன் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஷாய் ஹோப் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா 6 ரன்னிலும், தசுன் ஷன்கா ரன்கள் ஏதுமின்றியும், குல்பதின் நைப் 12 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பான்டன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News