ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியில் முகமது வசீம் 7 ரன்களிலும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய குசால் பெரேரா - அம்பத்தி ராயுடு இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் பெரேரா அரைசதம் கடந்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 65 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா விக்கெட்டை இழக்க, அம்பத்தி ராயுடு 44 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்படி களமிறங்கிய ரோஹன் முஸ்தஃபா, அலெக்ஸ் ஹேல்ஸ், கேப்டன் காலின் முன்ரோ, ஆடம் ஹோஸ், வநிந்து ஹசரங்கா, அசாம் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் களமிறங்கிய அலி நேசர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்த, மறுபக்கம் களமிறங்கிய ரூதர்ஃபோர்ட் 18 ரன்களுக்கும், லூக் வுட் 30 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலி நேசர் 5 பவுண்டரி, 2 சிச்கர்க என 63 ரன்களைச் சேர்த்த நிலையிலும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

எமிரேட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஐஎல்டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News