ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஹலேக்ஸ் ஹேல்ஸ் 4 ரன்களிலும், காலின் முன்ரோ 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான முஸ்தஃபா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் 27 ரன்களிலும் விக்கெட்டை இழக்க இறுதியில் ஹாவெல் 34 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா வாரியர்ஸ் அணி தரப்பில் ஜவதுல்லா, நூர் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன்னிலும், டாம் கொஹ்லர் 15, மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஹோஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த ஜோ டென்லி ஒரு ரன்னிலும், பால் வால்க்கர் 27 ரன்களிலும், முகமது நபி ஒரு ரன்னிலும், நூர் அஹ்மத் 23 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க ஷார்ஜா வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் லுக் வுட், வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News