இந்த சீசனில் நான் அதிக போட்டிகளில் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறேன் - மதீஷா பதிரானா!

Updated: Sat, May 06 2023 22:36 IST
I'm a massive fan of Cristiano Ronaldo so the celebration after taking the wicket is inspired by him
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். 

குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வீரரான மதீஷா பதிரானா தனது அபாரமான பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் உலகத்தில் வெள்ளைப்பந்தில் இலங்கையின் மலிங்கா பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமானதாக இருந்தது. தற்பொழுது அங்கிருந்து வந்திருக்கும் இவரது பந்து வீச்சையும் விளையாடுவது பேட்டர்களுக்கு கடினமாக இருக்கிறது.

சிறப்பான செயல்பாட்டால் ஆட்டநாயகன் விருது வென்ற பதிரனா பேசுகையில்,“சிஎஸ்கே அணி உடனான எனது பயணம் கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டில் எனக்கு இரண்டு ஆட்டங்களில் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனில் நான் அதிக போட்டிகளில் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

அணி நிர்வாகம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறார்கள். டி20 கிரிக்கெட்டில் இதுதான் எனது சிறந்த செயல்பாடு என்று நினைக்கிறேன். நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிரமான ரசிகன். எனவே அவரது கோல் கொண்டாட்டத்தை போல நான் எனது விக்கெட் கொண்டாட்டத்தை அமைத்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை