இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு சௌரப் திவாரி - அம்பத்தி ராயுடு இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் கடந்து விளையாடி வந்த அம்பத்தி ராயுடு 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குர்கீரத் சிங்கும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Advertisement

பின்னர் மற்றொரு தொடக்க வீரரான சௌரப் திவாரி அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யூசுப் பதான் 14 ரன்களையும், கேப்டன் யுவராஜ் சிங் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 49 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்களைக் குவித்தது. விண்டீஸ் தரப்பில் ஜெரோம் டெய்லர், சுலைமான் பென், கார்டர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் - வில்லியம் பெர்கின்ஸ் இணையும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் சேர்த்த நிலையில் பெர்கின்ஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய லிண்டல் சிம்மன்ஸ் ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 38 ரன்காளைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டுவைன் ஸ்மித் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஆஷ்லே நர்ஷ் 21 ரன்களையும், நர்சிங் தியோனரைன் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்தியா மாஸ்டர்ஸ் தரப்பில் ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News