எஸ்ஏ20 தொடரில் கலக்கும் ‘44 வயது இளைஞன்’; இணையத்தில் வைரலாகும் இம்ரான் தாஹிர் காணொளி!

Updated: Thu, Feb 08 2024 14:42 IST
எஸ்ஏ20 தொடரில் கலக்கும் ‘44 வயது இளைஞன்’; இணையத்தில் வைரலாகும் இம்ரான் தாஹிர் காணொளி! (Image Source: Google)

தென் ஆப்பிரிகாவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தொடக்க வீரர் லுயிஸ் டு ப்ளூய் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. இதில் அதிகபட்சமாக டு ப்ளூய் 68 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 55 ரன்களையும் சேர்த்தனர். 

இந்நிலையில் இப்போட்டியின் போது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, நேற்றைய போட்டியில் இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை சாம் குக் வீச அதனை எதிர்கொண்ட பார்ல் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் வான் பியூரன் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயற்சித்தார். 

 

ஆனால் பந்து பேட்டின் மேல் பகுதியில் பட்டு பின் திசையில் சென்றது. அப்போது தேர்ட் மேன் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இம்ரான் தாஹிர் பின்பக்காம ஓடியதுடன், டைவ் அடித்த அந்த கேட்சைப் பிடித்து அசத்தினார். தற்போது 44 வயதை எட்டியுள்ள இம்ரான் தாஹிர் இப்பது அபாரமாக ஃபீல்டிங் செய்து கேட்ச் பிடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் இம்ரான் தாஹிர் பிடித்த கேட்ச் குறித்தான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை