மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Oct 08 2024 21:59 IST
Image Source: Google

India Women vs Sri Lanka Women Dream11 Prediction, T20 World Cup 2024:  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் இந்திய அணியானது வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

IND W vs SL W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs இலங்கை மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.09 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

IND W vs SL W T20I Pitch Report

இந்தியா - இலங்கை மகளிர்ர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 101 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 46 முறையும், சேஸிங் செய்த அணி 54 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

IND W vs SL W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 25
  • இந்திய மகளிர் அணி - 19
  • இலங்கை மகளிர் அணி - 05
  • முடிவில்லை - 01

IND W vs SL W T20I Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

India Women vs Sri Lanka Women Probable Playing XI

இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா, சஜீவன் சஜனா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ரேணுகா சிங்.

இலங்கை மகளிர் அணி:விஷ்மி குணரத்ன, சாமரி அத்தபத்து (கே), ஹர்ஷிதா மாதவி, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, ஹசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி , சுகந்திகா குமாரி, இனோஷி பிரியதர்ஷனி, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர.

IND W vs SL W T20I Dream11 Team

விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
பேட்ஸ்மேன்கள்- நிலாஷி டி சில்வா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனாம், ஷஃபாலி வர்மா, 
ஆல்-ரவுண்டர்கள் - ஹர்மன்பிரீத் கவுர், சமாரி அத்தபத்து
பந்துவீச்சாளர்கள் - சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதனி, ரேணிகா சிங், ராதா யாதவ்

IND W vs SL W T20I Dream11 Prediction, IND W vs SL W Dream11 Team, Fantasy  Cricket Tips, IND W vs SL W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs Sri Lanka Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை