IND-A vs AFG-A Semi-final 2 ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் நிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இத்தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்த கையோடும் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பர்ப்புகள் அதிகரித்துள்ளன. 

IND-A vs AFG-A Semi-final 2: Match Detail

  • மோதும் அணிகள் - இந்தியா ஏ vs ஆஃப்கானிஸ்தான் ஏ
  • இடம் - அல் அமேரத் கிரிக்கெட் மைதானம், அல் அமேரத்
  • நேரம் - அக்.25 இரவு 7.00 மணி (இந்திய நேரப்படி)

IND-A vs AFG-A Semi-final 2 Pitch Report

Advertisement

இந்தியா - ஆஃப்கானிஸ்ஹான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது அல் அமேரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 103 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 43 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 59 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 148 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 220 ரன்களாக இருக்கிறது. இதனால் நிச்சயம் பேட்டர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

IND-A vs AFG-A Semi-final 2: Live Streaming Details

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். மேற்கொண்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

India A vs Afghanistan A Possible XIs 

India A Probable Playing XI: அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா (கே), ஆயுஷ் பதோனி, நேஹல் வதேரா, ராமன்தீப் சிங், நிஷாந்த் சிந்து, அன்ஷுல் கம்போஜ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ரசிக் தார் சலாம், வைபவ் அரோரா

Afghanistan A Probable Playing XI : செதிகுல்லா அடல், ஜுபைத் அக்பரி, ஷரபுதீன் அஷ்ரஃப், நுமன் ஷா, தர்வீஷ் ரசூலி (கே), கரீம் ஜானத், அல்லா கசன்பர், கைஸ் அஹ்மத், ஃபரிதூன் தாவூத்சாய், பிலால் சாமி, ஷாஹிதுல்லா கமால்

IND-A vs AFG-A Semi-final 2 Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங், நுமன் ஷா
  • பேட்டர்கள் - திலக் வர்மா, செதிகுல்லா அடல், ராமன்தீப் சிங், ஆயுஷ் படோனி
  • ஆல்-ரவுண்டர் - அபிஷேக் சர்மா (கேப்டன்),கரீம் ஜானத் (துணை கேப்டன்), ஷரபுதீன் அஷ்ரப்
  • பந்துவீச்சாளர்கள் - ரசிக் சலாம், பிலால் சாமி
Advertisement

IND-A vs AFG-A Semi-final 2 Dream11 Prediction, Today Match IND-A vs AFG-A, IND-A vs AFG-A Dream11 Team, India A vs Afghanistan A, Fantasy Cricket Tips, IND-A vs AFG-A Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News